Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மண்டேலா படத்துக்கு மறுதணிக்கை கேட்டு வழக்கு

21 ஏப், 2021 - 13:11 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Mandela-movie-for-Re-censor

யோகிபாபு ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான படம் மண்டேலா. அறிமுக இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கி இருந்தார். ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரிதிருந்தார். இந்த படம் கடந்த 4ம் தேதி விஜய் டிவியில் வெளியானது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் யோகிபாபு முடி திருத்தும் தொழிலாளியாக நடித்திருந்தார். கிராமத்து மரத்தடியில் வாழும் அவரை அந்த ஊர் மக்கள் தங்கள் வீட்டு வேலைகளுக்கும், குறிப்பாக கழிவறை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். வீட்டின் பின்வாசல் வழியாகத்தான் அவரை அனுமதிப்பார்கள்.

இதனை ஆட்சேபித்து தமிழ்நாடு முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் "மருத்துவர் சமுதாயம் மதிப்பு மிக்க சமுதாயமாகும். அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்றும் ஊர் மக்கள் அவரை செருப்பால் அடிப்பது போன்றும் மண்டேலா படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை தணிக்கை குழு அனுமதித்துள்ளது.

இது மருத்துவ சமுதாயத்தை மக்களை இழிவுபடுத்துவதாகும். எனவே மண்டேலா படத்தை மறுதணிக்கை செய்து இந்த காட்சிகளை நீக்க வேண்டும்." என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விவேக் மரணம் குறித்து சர்ச்சை கருத்து : கைதாகிறார் மன்சூரலிகான்விவேக் மரணம் குறித்து சர்ச்சை ... சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா சஞ்சனா கல்ராணிக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
22 ஏப், 2021 - 13:40 Report Abuse
திரு.திருராம் தன்னை தாழ்நிலையிருந்து விடுவித்துக்கொண்டிருக்கும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சமூகங்களை விசநரிகள் தங்கள் பிடியில் உள்ள வெள்ளித்திரை சின்னத்திரை அச்சு ஊடகங்கள் வழியாக விடாமல் அவர்களை மீண்டும் மீண்டும் தாழ்த்தி அழுத்திக்கொண்டிருக்கிறது, அவர்களை வெளிஉலகை சுவாசிக்கவிடாமல் நீ இப்படித்தான், இனியும் இப்படித்தான் முன்பும் இப்படித்தான், எனவே நீ மற்றவனை எதிரியாக பாவித்துக்கொள், மதம்மாறிவா நாங்கள் உங்களை வைத்தும் உங்களிடமிருந்தும் கறந்துகொள்கிறோம் என்பதுதான் நடக்கின்றது(எங்கள் கிராமத்து தாத்தா காலத்து நாவிதர் ஒருவரின் பேரன்(பட்டப்படிப்பு முடித்தவர்), இன்று நகரத்தில் நட்சத்திர ஓட்டலில் ப்யூட்டி சலூன் வைத்து லட்சங்களில் கொழித்துக் கொண்டிருக்கிறார். ஆதிக்க சாதிகள் என கூறப்பட்டவர்கள் அதே பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனங்களில் சில ஆயிரங்களுக்கு மிகுந்த மன அழுத்தம் மிக்க பணிகளை மேற்கொண்டுள்ளனர், எனவே திரைத்துறை தன்னை மாற்றிக் கொண்டால் பிழைக்கும், அல்லது விசநரிகளின் கதை வசனத்துடன் அவர்கள் கால்கழுவிக்கொண்டிருக்கவேண்டியதுதான்,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in