Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு

19 ஏப், 2021 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Simbu-surprise-CWK-2-fame-Kani-and-Director-Thiru

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி 2' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கனி வென்று ஐந்து லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார். இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, அறிவு, பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் முகேன் ராவ் ஆகியோர் நேரடியாகவும், ஏஆர் ரகுமான் வீடியோ கால் மூலமாகவும் கலந்து கொண்டனர்.

கடைசியாக நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனிக்கும் மற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் ஆகியோருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார் சிம்பு. தன்னுடைய 'காரக்குழம்பு' ரெசிபி மூலம் நிகழ்ச்சியில் பேசப்பட்டவர் கனி. போட்டியில் வென்ற கனியை மீண்டும் அவருடைய வீட்டுக்குச் சென்று பாராட்டினார் சிம்பு.

'காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகள் தான் கனி. 'தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி' ஆகிய படங்களை இயக்கிய திருவைக் காதலித்து திருமணம் புரிந்தவர்.

சிம்பு அவருடைய நண்பர் நடிகர் மகத், தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோருடன் கனி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிம்பு வந்ததைப் பற்றி, “மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை, நிரம்ப நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் திரு டுவிட்டரில், ‛‛இன்ப அதிர்ச்சியாக எங்கள் வீட்டிற்கு வந்த சகோதரர் சிம்பு, மகத், ரக்ஷன், சயத்திற்கு நன்றி. கனி வைத்த காரக்குழம்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தாபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் ... "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் "மிஸ்டர் காப்ளர்" - சாதனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
21 ஏப், 2021 - 13:36 Report Abuse
திரு.திருராம் புரட்சி டைரக்டர்களின் மகள்கள் ஏன் தன் கணவனை சேரியில் உள்ள தைரியமான ஏழை ஈரோ மாப்பிள்ளையை தேடுவதில்லை, டாக்டர் மாப்பிள்ளை டாக்டர்தான் என்பது போல் டைரக்டர் மாப்பிள்ளை டைரக்டர் மட்டும்தானா, ரசிகர்கள் மட்டுமே சினிமாவில் வருவதை நம்பி சீரழியவேண்டுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in