Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பண மோசடிப் புகார்: விமல் விளக்கம்

05 மார், 2021 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Actor-Vimal-clarification-about-foregery-complaint

நடிகர் விமலின் மனைவி அக்ஷயா சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், விமல் மீது தஞ்சையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தப் புகாரில், மன்னர் வகையறா படத்தை தயாரிக்க, தனது வீட்டை அடமானம் வைத்து விமலுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்தப் பணத்தை திருப்பித் தராமல் அவர் ஏமாற்றி விட்டதாகவும், தற்போது தான் நடுத்தெருவில் நிற்பதாகவும்' குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விமல் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன். அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் என் மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.

திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும். மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்” என விமல் கூறி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சாய் பல்லவியின் அடுத்த அசத்தல் டான்ஸ்சாய் பல்லவியின் அடுத்த அசத்தல் ... சஸ்பென்ஸ் திரில்லர் : ஸ்ரீகாந்த் ஜோடியாகும் சிரிஷ்டி டாங்கே சஸ்பென்ஸ் திரில்லர் : ஸ்ரீகாந்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

10 மார், 2021 - 17:22 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு திமுகவில் சீட் பெற தகுதி வந்துவிட்டது
Rate this:
Girija - Chennai,இந்தியா
08 மார், 2021 - 11:11 Report Abuse
Girija முதல் படத்தின் பெயர் இவருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in