Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்?

26 பிப், 2021 - 16:16 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-sivan-wedding-on-March

நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. அந்தவகையில் அவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள தயாராகி விட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.

இந்த நிலையில், தற்போது வருகிற மார்ச் மாதத்தில் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நேற்று முதல் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பாகி வருகிறது. ஆனால் வழக்கம்போல் இந்த செய்தி குறித்து அவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதனால் இந்த செய்தியாவது உண்மையாகுமா? இல்லை இதுவும் வழக்கம்போல் வதந்திதானா? என்பது விரைவில் தெரியவரும்.

மேலும், நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகும் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தற்போது நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு, அவர்கள் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பேனரில் சில சிறிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதிபிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Loganathaiyyan - Kolkata,இந்தியா
02 மார், 2021 - 16:55 Report Abuse
Loganathaiyyan இவளுக்கும் இவனுக்கும் கல்யாணம் ஆன மறு நிமிடமே இந்தியாவின் ஜீ டீ பி கிடு கிடு என உயரம் ???நீங்க ரெண்டு பெரும் Living Together ஆகவே இருந்தா எங்களுக்கு அதனால் ஒரு லாபம் இல்லை நஷ்டம் இல்லை சரியா
Rate this:
sam - Alaska,யூ.எஸ்.ஏ
06 மார், 2021 - 21:33Report Abuse
samThen why did you read and wasting your time in the comments?...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 மார், 2021 - 03:26 Report Abuse
J.V. Iyer இதைவிட தமிழ் மக்களுக்கு வேறு என்ன நல்ல செய்தி வேண்டும்? ஆஹா ஓஹோ பேஷ்.பேஷ்.. நாட்டு வளர்ச்சியில் இவர்கள் பங்கு இதுதான். அட சே...
Rate this:
sam -  ( Posted via: Dinamalar Android App )
27 பிப், 2021 - 11:42 Report Abuse
sam வேற வேலை இருந்தா பாருங்க... கருமம்....
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
27 பிப், 2021 - 08:43 Report Abuse
VENKATASUBRAMANIAN எதற்கு திருமணத்தை கொச்சை படுத்திகின்றனர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in