Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெடி ஸ்டார்ட்.... 3 நாட்களில் மாஸ்டர் 100 கோடி..

16 ஜன, 2021 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Master-collected-in-100-crore-in-3days

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை நாட்களில் 100 கோடி வசூலைக் கடக்கிறது என்பதுதான் அவர்களின் படங்கள் வெளியாகும் போது இருக்கும் முக்கிய பேச்சாக இருக்கும்.

விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளிவந்து மூன்று நாட்களாகிவிட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 100 கோடி வசூலைப் படம் தொட்டுவிட்டதாக டுவிட்டரில் பகிர ஆரம்பித்துவிட்டார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி. அதிலேயே மாஸ்டர் இந்த மகத்தான சாதனையைப் புரிந்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் 55 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 10 கோடி, கேரளாவில் 5 கோடி, கர்நாடகா, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசூல் என 30 கோடி, ஆக மொத்தம் 100 கோடி வசூல் என ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

முதல் நாள் வசூல் 25 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அப்படியே இந்த 3 நாளில் 100 கோடி வசூல் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால் விஜய் ரசிகர்கள் கூடுதலாகக் கொண்டாடுவார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் 'காந்தி டாக்ஸ்'விஜய் சேதுபதி நடிக்கும் மௌனப் படம் ... அப்படி நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் அப்படி நடிக்க மாட்டேன் - கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19 ஜன, 2021 - 16:51 Report Abuse
திரு.திருராம் டிக்கெட் விலை 2000 ஆயிரம் முதல் 5000ஆயிரம் வரை விற்கப்பட்டிருந்தால் இந்த வசூல் சாத்தியம்தான், ஆனா 7வருசம் லொங்கிலொாங்கி படிச்ச டாக்டருங்க மட்டும்தான் 5ரூவா வாங்கிகிட்டு வைத்தியம் பாக்கோணும்,
Rate this:
vijai -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2021 - 13:23 Report Abuse
vijai master super
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஜன, 2021 - 10:47 Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  ஹா ஹா.. இப்படித்தான் மெர்சல் படத்துக்கும் முட்டு கொடுத்தானுவ.. பாவம் அந்த பட தயாரிப்பாளர் பாவம் எதொ ஒரு முட்டு சந்துக்கு பக்கத்துல பொட்டி கட வச்சி பொழப்ப ஒட்டுறதா கேள்விப்பட்டேன் ...
Rate this:
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
17 ஜன, 2021 - 07:32 Report Abuse
Shiva திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய ஒன்பது மாதம் காத்திருந்து சொன்னது போலவே ரிலீஸ் செய்த படக்குளுவினருக்கு பாராட்டுக்கள். உங்களை தூற்றுபவர்களை புறம் தள்ளுங்கள். மாஸ்டர் படத்தின் மாபெறும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்... Vijay the saviour of Film Industry...
Rate this:
17 ஜன, 2021 - 01:38 Report Abuse
PAROTTA MASTER... sollanum nu mudivakipochi oru 1000 kodi nu sollavenithane athu enna biskothu 100 kodi
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in