ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்க உருவாக உள்ள 'மஹா' படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. காவி உடை அணிந்த ஹன்சிகா, கஞ்சாவைப் புகைப்பது போன்ற புகைப்படமும், பின்னணியில் சாமியார்கள் இருப்பது போன்ற போஸ்டர்களும் இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினர் அந்த போஸ்டர்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அந்த போஸ்டர்களுக்கு தெலுங்கானாவில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்எல்ஏ ராஜா சிங் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவருடைய டுவிட்டரில், “உங்கள்(இயக்குநர் ஜமீல்) 'மஹா' படத்தின் போஸ்டர் இந்துக்களை தரக் குறைவாகக் காட்டுகிறது. நீங்கள் பர்தா அணிந்த பெண்கள் புகைபிடிப்பது போன்ற, பின்னணியில் உங்களது புனித இடங்களுடன் கூடிய போஸ்டரை வெளியிடுவீர்களா ?. உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா அப்படி வெளியிட,” என கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக டுவிட்டரில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.