தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
நடிகர் சூர்யா நடிப்பில் படம் வெளி வந்து வெகு நாட்களாகி விட்டதால், அவர் நடிப்பில் உருவாகும் 'என்.ஜி.கே.,' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் சூர்யாவோடு, இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என பிரபல நபர்களும் கைகோர்க்க, எதிர்பார்ப்பு ரொம்பவே இருக்கிறது.
இந்நிலையில், படம் பற்றிய எந்தத் தகவலும் பெரிதாக இல்லாததால், சமூக வலைதளங்கள் மூலம், சூர்யாவுக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதையடுத்து, தயாரிப்பாளர் பிரபு மூலம், டுவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு தகவல் சொல்லச் சொல்லி இருக்கிறார் சூர்யா. இதையடுத்து, டுவிட்டர் மூலம் பிரபு சூர்யா ரசிகர்களுக்கு 'என்.ஜி.கே.,' படம் குறித்து தகவல் சொல்லி இருக்கிறார்.
அதில், சூர்யா, செல்வராகவன், யுவன் கூட்டணியில் 'என்.ஜி.கே.,' படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. உங்களுக்கு அது மிகப் பெரிய விருந்தாக அமையும். ஆனால், படம் எப்போது வெளியாகும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியாது என சொல்லி இருக்கிறார்.
இப்படியொரு தகவலை எதிர்பார்க்காத ரசிகர்கள், ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.