இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் 'கனா'. இதன் படபிடிப்பு முடிந்து, வரும் 21ல் படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படத்தில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளதாக, படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
'கனா' படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படியொரு கதையை முடிவு செய்த போதே, படத்தில் எப்படியாவது பெண்கள் கிரிக்கெட் மேட்ச் ஒன்றை ஒரிஜினலாகவே படம் பிடித்து, அதை காட்ட வேண்டும் என முடிவெடுத்தேன். அதன்படி, படத்தின் கடைசி அரை மணி நேரம், ஒரிஜினலான கிரிக்கெட் போட்டி நடைபெறும். அதற்காக, ஒளிப்பதிவாளர் தினேஷ் உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பலர் கடுமையாக உழைத்தனர்.
படத்தில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார். அதாவது சச்சின் என்பவர் ஒருவர்; டெண்டுல்கர் என்பவர் மற்றொருவர். இதில் சவரிமுத்து சச்சினாகவும், அந்தோணி பாக்கியராஜ் டெண்டுல்கராகவும் நடித்துள்ளனர்.
இவ்வாறு அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.