'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் ராஷி கண்ணா. முன்னணி தெலுங்கு நடிகையான இவர், தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழில் அவர் நடித்த இமைக்கா நொடிகள் படம் வெளியானதை அடுத்து தற்போது ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா ஆகிய அடுத்தடுத்து வெளிவர உள்ளன.
அடங்கமறு படத்தில் ராஷி கண்ணா நடிப்பு குறித்து இயக்குநர் கார்த்திக் தங்கவேல் கூறுகையில், அடங்கமறு போலீஸ் படம் என்றபோதும் கதாநாயகியாக நடித்துள்ள ராஷி கண்ணாவை டூயட் பாடும் நாயகியாக மட்டும் பயன்படுத்தாமல் கதையிலும் முக்கிய பங்கு வகிக்கும் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறேன்.
ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு அவர் தாமதமாக வந்ததில்லை. 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 8 மணிக்கே வந்து மேக்கப் போட்டு, தயாராகி விடுவார். படத்தின் புரொமோஷன் என்றால், வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அனுமதி வாங்கி பங்கேற்றுவிடுவார். இப்படி தான் நடிக்கும் படங்களுக்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். இதுபோன்ற நல்ல நடத்தைகளே அவரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படுத்தும் என்றார்.