ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாரி 2'. இப்படத்தின் டிரைலர், மூன்று பாடல்கள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இப்படத்தை தெலுங்கிலும் அதே தினத்தில் வெளியிட இருக்கிறார்கள்.
நேற்று தெலுங்கு படத்தின் முதல் சிங்கிளான 'ரௌடி பேபி' பாடலை யு டியூபில் வெளியிட்டார்கள். அதற்கு தெலுங்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகிறார்கள். அந்தப்பாடல் 2 லட்சம் பார்வைகளைத் தொட உள்ளது.
தெலுங்கில் அந்தப் பாடலை தனுஷ், மானசி பாடியுள்ளார்கள். தனுஷ் தமிழில்தான் அடிக்கடி பாடுவார். தெலுங்கில் பாடுவது மிக மிகக் குறைவு தான். ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது தெலுங்கிலும் பாடியுள்ளார்.
பட வெளியீட்டிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழில் கூட இப்படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிடாமல் உள்ளார்கள். டிசம்பர் 21ம் தேதி வெளியாக உள்ள படங்களில் 'மாரி 2' படம் தான் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.