ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோவையை சேர்ந்த இளைஞர் அருண்காந்த், 10க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கி உள்ளார். அவர் தனது கோவை நண்பர்களுடன் இணைந்து தயாரித்து, இசை அமைத்து, இயக்கி உள்ள படம் கோக்கோ மாக்கோ. இதனை 12 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார். சுகுமார் சுந்தரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இதில் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் ஹீரோவாகவும், புதுமுகம் தனுஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், அஜய் ரத்னம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி அருண்காந்த் கூறியதாவது:
ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து காட்சிக்கு 3 முறை ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். கோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்களே அதைத்தான் கோகோ மாக்கோ என்று படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம். 12 நாட்களில் முழுப்படத்தை முடித்திருந்தாலும், பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான கதையும் இருக்கிறது என்றார்.