ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி நாயகிகளாக நடித்துள்ளனர். எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
கடந்த தீபாவளிக்கே வெளியிட திட்டமிடப்பட்டி ருந்த இந்த படம் பொங்கலுக்கும் வெளியாகாது என்பதால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமிழந்து காணப்படுகிறார்கள். அதோடு என்ஜிகே எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை சூர்யா, செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, எஸ்.ஆர். பிரபு ஆகியோர் இணைய பக்கத்திற்குள் சென்று கேட்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், என்ஜிகே படத்தின் அப்டேட்ஸ் குறித்து அவ்வப்போது அவர்கள் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி என்ஜிகேவை வெளியிட தயாராகி விட்டதாக சூர்யா ரசிகர்களுக்கு உற்சாக செய்தி வெளியிட்டுள்ளனர்.