ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாக ஆரம்பித்த படம் தான் என்ஜிகே. தீபாவளி, அதன்பினர் பொங்கலுக்கு வெளிவரும் என அடுத்தடுத்து சொல்லப்பட்டு வந்த இந்தப்படம், தற்போது தான் இறுதிகட்ட படப்பிடிப்பையே எட்டியுள்ளது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் கொச்சி அருகில் மட்டாஞ்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இங்கே சூர்யா, ரகுல் பிரீத் சிங் இருவரும் பங்குபெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்குகிறார்களாம். இந்த பாடல் காட்சியுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளதாம். அரசியல் த்ரில்லராக உருவாகி வருகிறது இப்படம். சாய்பல்லவி இன்னொரு கதாநாயகியாக நடித்து வருகிறார்.