'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த '96' படம் மிகப் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இந்த ஆண்டில் இதுவரை வந்த படங்களில் இப்படத்திற்கு தனி இடமுண்டு. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை படம் வெளியாவதற்கு முன்பே பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு வாங்கிவிட்டார். தெலுங்கில் யார் யார் நடிக்க உள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னடத்தின் பிரபல ஹீரோவான கணேஷ், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். த்ரிஷா கதாபாத்திரத்தில் பாவனா நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. பிரித்தம் கப்பி இப்படத்தை இயக்க உள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஒரு படம் அடுத்தடுத்து மற்ற மொழிகளில் ரீமேக் ஆவது தமிழ் சினிமாவுக்குப் பெருமை.