தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் கனா. அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். பெண்கள் கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை. அந்த கிராமத்து பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேசும், தந்தையாக சத்யராஜும் நடித்துள்ளனர்.
துவக்கத்தில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. பின்னர் படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டபோது அதில் சிவகார்த்திகேயன் மெக்கானிக்காக தோன்றினார். அதன்பிறகு அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறினார்கள். அதன் பிறகு வந்த டீசர் மற்றும் விளம்பரங்களில் சிவகார்த்திகேயன் முன்நிறுத்தப்படுகிறார்.
தான் ஒரு தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இந்த படத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை இந்த கதை கொண்டிருந்தது. அதைப் பற்றி நாங்கள் விவாதிக்கும்போது கூட சிவாவுக்கு இது பற்றி எந்த யோசனையும் இல்லை. உண்மையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க, பல பிரபலமான நடிகர்களையும் கூட அவர் யோசித்தார். ஆனால் இறுதியாக அவர் தான் அந்த கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதை நான் அவரிடம் எடுத்து சொன்னேன். சிவகார்த்திகேயனை இந்த படத்தில் எல்லோருக்கும் பிடிக்கும்.