‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2.0 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், இயக்குநர் மகேந்திரன், ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள இப்படம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
பேட்ட படத்தின் இரண்டு பாடல்கள், மரண மாஸ் மற்றும் உல்லலல்லா பாடல்கள் வௌியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் மொத்த பாடல்களும் இன்று(டிச.,9) வௌியிடப்பட்டது. தனியார் கல்லூரியில் நடந்த பிரம்மாண்ட இசை வௌியீட்டு விழாவில் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ், த்ரிஷா, சிம்ரன், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.
இசை வௌியீட்டில் புதுமை
சன்பிக்சர்ஸ் படத்தின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் புதுமையாக நடக்கும். அந்தவகையில் சர்கார் படத்தின் இசையை புதுமுமையாக மக்களே செல்போன் மூலம் வௌியிட்டனர். பேட்ட படத்தின் இசையையும் மக்களே வௌியிட்டனர். இதற்காக பிரத்யேக மொபைல் எண் கொடுக்கப்பட்டது. அந்த எண்ணிற்கு அழைத்தவுடன் பேட்ட பராக் என ரஜினி குரல் ஒலிக்கிறது. அதையடுத்து ஒரு செய்தி வரும். அதை அழுத்தியதும் பேட்ட இசையை மக்களே வௌியிடும் படி அமைக்கப்பட்டது.
சிம்ரன் பேசும்போது, ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை 15 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்டேன். இந்தமுறை கார்த்திக் சுப்பராஜ் அழைத்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரஜினியின் மிகப்பெரிய ரசிகை நான். அவரின் ஸ்டைல், நடிப்பு என எல்லாமுமே பிடிக்கும். இதை நான் சிம்ரனாக சொல்லவில்லை, ஒரு மிகப்பெரிய ரசிகையாக சொல்கிறேன் என்றார்.
த்ரிஷா பேசும்போது : நான் ரஜினி ரசிகை இல்லை என்று சொல்ல மாட்டேன். ரஜினியை பற்றி பேசிக் கொண்டே போகலாம். ஒரே ஒரு விஷயத்தை சொல்கிறேன். என்றும் ஒரே ஒரு ரஜினிகாந்த் என்றார்.