இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் காலூன்றியிருக்கும் அவர், படங்களில் நடிப்பதோடு, தயாரிப்பது, வசனம் எழுதுவது, பின்னணி பாடுவதிலும் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே தான் முதன்முதலாக தயாரித்து முதிர்ச்சியான வேடத்தில் நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருந்தார் விஜய் சேதுபதி. அதன்பிறகு ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்திலும் ஒரு பாடல் பாடினார்.
தற்போது, சாம்.சி.எஸ் இசையில், "இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்" என்ற படத்திற்காக, "சித்தர்..." என தொடங்கும் பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.