'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நடிப்பில் உருவாகியுள்ள படம் - விஸ்வாசம். இப்படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினமே விஸ்வாசம் படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார் அஜித்.
அதன்படி விஸ்வாசம் படம் ஜனவரி 10 அன்று படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியாகவிருக்கிறது. டிசம்பர் 2 ஆம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர். டிரைலர் வெளியான நான்கு நாட்களில் அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பேட்ட படத்தின் புரமோஷன் சூடுபிடிக்க உள்ளதை அடுத்து விஸ்வாசம் படத்தின் புரொமோஷனையும் தீவிரப்படுத்தி உள்ளனர். அதற்கான புரமோஷனை தயாரிப்பு நிறுவனமா சத்யஜோதி பிலிம்ஸ் துவங்கி உள்ளனர்.
மொத்தத்தில் ரஜினியுடன மோதுவதற்கு முடிவெடுத்துவிட்டார் அஜித்.