திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கஜா புயலுக்கு திரையுலகினர் நிதியுதவி அளித்து வரும் நிலையில், சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தனஞ்செயனும் உதவ முன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக காற்றின் மொழி தயாரிப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : காற்றின் மொழி திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த சமயத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக டெல்டா பகுதி மக்களுக்கு நீங்கள் காற்றின் மொழி திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.
இன்று(நவ., 20) முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு காற்றின் மொழி டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். நம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.