வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கஜா புயலுக்கு திரையுலகினர் பலரும் நிதி உதவியும், பொருள் உதவியும் செய்து வருகின்றனர். 2.0, இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி அறவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கஜா புயலால் 7 மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்புயலின் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், மக்களின் துயர் துடைக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், லைகா குழுமம் ரூ.1,01,00,000- முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளது என தெரிவித்துள்ளது.
ஷங்கர் ரூ.10 லட்சம் : இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.