தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம், ஸ்ரீகாந்த் நடித்த நம்பியார் படத்தை இயக்கிய கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் 'திமிரு புடிச்சவன்'. இப்படத்தை தனது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் தன்னுடைய மனைவி பெயரில் விஜய் ஆண்டனியே தயாரித்திருக்கிறார்.
இதற்குமுன் விஜய் ஆண்டனி தயாரித்த பல படங்கள் லாபம் கொடுத்தாலும், சைத்தான், அண்ணாதுரை, மற்றும் கடைசியாக தயாரித்த காளி ஆகிய படங்கள் கடும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டன. திமிரு பிடிச்சவன் விஜய் ஆண்டனிக்கு லாபத்தைக் கொடுத்திருக்கிறது.
என்றாலும் முந்தைய படங்களின் நஷ்டம் அவரை இன்னும் தொடருகிறது. எனவே இனிமேல் சொந்தப் படத்தயாரிப்பைக் கைவிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார். அதாவது இனிமேல் மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள 'அக்னிச் சிறகுகள்' படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் வேறு சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.