தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நாவலை தழுவி, 1941-ம் ஆண்டு வெளிவந்த டம்போ என்ற அனிமேஷன் படம், தற்போது அதேபெயரில் ஹாலிவுட்டில் படமாக உருவாகி உள்ளது. டிம் புர்டன் இயக்கி உள்ளார். கோலின் பேரெல், மைக்கேல் கேடான், டேனி டேவிடோ, எவா கிரீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பறக்கும் திறன் கொண்ட பெரிய காதுகளை உடைய குட்டி யானையை மையமாக வைத்து, சர்க்கஸ் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. வால்ட் டிஸ்னி பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் விதமாக படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இப்படம், இந்தியாவிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவதால் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அடுத்தாண்டு கோடை விடுமுறையில் குழந்தைகளை குதூகலிக்க வருகிறான் இந்த டம்போ.