ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா, அதன்பிறகு பாலிவுட்டில் நடித்து வந்தார். 6 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் அவர் நடித்த அமர் அக்பர் ஆண்டனி படம் தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் தமிழில் நடிக்கவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இலியானா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் காரணமாவ அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இலியானா அளித்துள்ள ஒரு பேட்டியில், ஆண்ட்ரூ எனது நண்பர். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நான் சந்தோசமாக இருக்கிறேன். எங்களுக்கு திருமணமாகி விட்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் வெளியான செய்திகள் உண்மையில்லை. இதற்கு மேல் எனது சொந்த வாழ்க்கைப்பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறியுள்ளார் இலியானா.
சமீபத்தில் அமர் அக்பர் ஆண்டனி பட விழாவிற்கு வந்திருந்த இலியானாவை பார்த்த அனைவருக்கும் பேர் அதிர்ச்சி. காரணம் அந்தவளவுக்கு உடல் பெருத்து காணப்பட்டார்.