'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய ராணுவதில் 6 ஆண்டுகள் சிறப்பு சேவை பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் ஏம்.ஏ.பாலா. சினிமா மேல் உள்ள ஆர்வத்தில் பிலிம் மேக்கிங் படித்து விட்டு குறும்படங்கள், ஆவணப்படங்கள் இயக்கி வந்தார். தற்போது, கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் என்ற முழுநீள திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இதில் புதுமுகம் தீபக்குடன், பிளாக் பாண்டி, எம்.எஸ்.ஜெய்சிந்த் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹரிதா, மலர் என்ற இரு நாயகிகள் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் மதுமிதா, கொட்டாச்சி, ஹேமா உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ராஜ்பரத் இசை அமைக்கிறார். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோ கார்த்திகேயன் காணாமல் போன தன் காதலியை தேடி அலைகிறார். வழியில் அவர் சந்திக்கும் வித்தியாசமான காதலர்கள், மனிதர்களை பற்றிய கதை. இதன் இசை மற்றும் டிரைலரை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டார். படம் வருகிற 23ந் தேதி வெளிவருகிறது.