தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அடுத்தப்படியாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படம் பிங்க் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் பிங்க் படத்தின் ரீ-மேக் அல்ல என வினோத் டுவிட்டரில் தெரிவித்ததாக தகவல் பரவியது. ஆனால் இது அவரின் டுவிட்டர் கணக்கு அல்ல, போலியாக யாரோ பரப்பி விட்டுள்ளனர்.
இதுகுறித்து வினோத் வெளியிட்ட செய்தி : எனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தான் அறிவிக்கும். மற்றபடி, என் பெயர் மூலம் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.