தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் சண்டக்கோழி வில்லனான மலையாள நடிகர் லால் நடித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தெலுங்கில் என்ட்ரி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படம் எவ்வளவு பிரமாண்டமாக தயாராகியுள்ளது என்பதை விவரிக்கும் நடிகர் லால், இந்தப்படத்திற்கான பட்ஜெட்டில் சுமார் 5௦ மலையாள படங்களை தயாரித்து விடலாம் என பிரமிப்புடன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல, தனது திரையுலக அனுபவத்திலேயே இந்தப்படத்தில் நடிக்கும்போதுதான், இரண்டுமுறை தனது திருமண நாட்களை கொண்டாடினாராம். அதாவது 'சாஹோ' படப்பிடிப்பில் நீண்ட நாட்கள் கலந்து கொண்டுள்ளதைத்தான் நடிகர் லால் இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.