இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக கோலோச்சிய பல நடிகர், நடிகைகள் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி, அதன் கொடூரத்தில் இருந்து மீண்டும் வந்துள்ளார்கள். நடிகை மம்தா மோகன்தாஸ், நடிகர் இன்னொசன்ட், மனிஷா கொய்லாரா ஆகியோர் கேன்சருக்கு எதிராக போராடி சிகிச்சை மற்றும் மனோதிடம் ஆகியவற்றால் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் தான்
தற்போது பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரேயும் கேன்சருக்கு எதிரான போராட்டத்தில் தான் இருக்கிறார். கேன்சரை விட, அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை விட, தனிமை தான் ரொம்பவே கொடுமையானது என்று தனது அனுபவம் பற்றி சில வரிகள் தான் என அப்போது கூறியிருந்தார் மம்தா மோகன்தாஸ்.
ஆனால், நடிகை மனிஷா கொய்ராலாவோ தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் போராடி மீண்டுவந்த அனுபவங்களை 'ஹீல்டு' என்கிற பெயரில் ஒரு புத்தகமாகவே எழுதியுள்ளார். 'எப்படி புற்றுநோய் எனக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது, அந்த சமயத்தில் வாழ்க்கையை பற்றி தான் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன என்பது குறித்து இதில் விரிவாக எழுதியுள்ளாராம் மனிஷா கொய்லாரா.