பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு சசிகுமாரும், எஸ்.ஆர்.பிரபாகரனும் இணையும் படம், கொம்பு வச்ச சிங்கம்டா. சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். இவர்களுடன் கலையரசன், சூரி, யோகிபாபு, ஹரீஸ் பெரடி, தீபா ராமானுஜம் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார், திபு நைனன் தாமஸ் இசை அமைக்கிறார். இந்தர் குமார் தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். படப்பிடிப்புகள் ஒரே கட்டமாக காரைக்குடி, பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடக்கிறது. இது 1990லிருந்து 94 வரையில் நடிக்கும் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.