Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை குயில் பி.சுசீலாவுக்கு பிறந்தநாள்

13 நவ, 2018 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-P-Susheela

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில், புலப்பாக்க முந்தராவ் - கவுத்தாரம் தம்பதிக்கு, 1935 நவ.,13ல் பிறந்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. இசை மேதை, துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக, இசை பயின்றவர். 1950ல், சென்னை வானொலியில், பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடினார். அவரது இசை திறமையை கண்ட இயக்குனர், கே.எஸ்.பிரகாஷ் ராவ், தாய் என்ற படத்தில், முதன் முதலில் பின்னணி பாட வைத்தார்.

கடந்த, 1955ல் வெளியான, கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம் பெற்ற, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே... என்ற பாடல்கள் பிரபலமாகின. 1969ல், அகில இந்திய பாடகிக்கான பரிசை பெற்றார். 2008ல் வெளியான, சில நேரங்களில் என்ற படத்தில் கடைசியாக, பொட்டு வைத்த... என்ற பாடலை பாடினார்.

9 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000 க்கும் அதிகமான பாடல்களை சுசீலா இதுவரை பாடியிருக்கிறார்.

பாடகி சுசீலாவின் பெயர் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தேசிய அளவில், மிகச்சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, ஐந்து முறை பெற்றவர். பத்மபூஷன், கலைமாமணி உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார்.


இந்தி திரை உகின் புகழ் உச்சியில் மின்னிய லதா மங்கேஷ்கர், ஷம்ஷாத் பேகம், ஆஷா போஷ்லே உட்பட பலரால் பாராட்டப்பட்டவர் இவர்.

பழம்பெரும் நடிகைகளான சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா உட்பட பத்துக்கும் மேற்பட்ட கதாநாயிகளுக்கு 100 படங்களுக்கு மேல் பாடிய பெருமை பெற்றவர் பி.சுசீலா. இசை அரசர் டி.எம்.சவுந்தர்ராஜன் அவர்களுடன் அதிக பாடல்கள் பாடியவர் இவர்.

இந்தியாவின் மிகப் பெரிய இசை மேதை நௌஷாத் அலி அவர்கள் "அக்பர்" படத்தில் (இந்தியில் "மொகலே - ஆசம்" திரைப்படம்) அவர் பாடிய பாடலைக் கண்டு வெகுவாகப் பாராட்டியது பல பத்திரிகைகளில் வெளியாகி அவருக்கு புகழ் சேர்த்தது.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி என அனைத்து பிரபலங்களுடன் இனைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சுசீலா.


அவர் பிறந்த தினம் இன்று. இவர் தனது 83-வது பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடினார். அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


உலகெங்கும் உள்ள பல கோடி மக்களை தன் இனிய குரல் வளத்தால் ஈர்த்துள்ள இவர் இந்திய சினிமாவின் பொக்கிஷம் ஆவார். அவர் 100 ஆண்டுகள் கடந்து வாழ வாழ்த்துவோம்!


பி சுசிலா பாடிய தனிப்பாடல்களில் சில முத்தான பாடல்கள்

1. உன்னை கண் தேடுதே - கணவனே கண்கண்ட தெய்வம்
2. அன்பில் மலர்ந்த நல் ரோஜா - கணவனே கண்கண்ட தெய்வம்
3. அமுதைப் பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம்
4. நீலவண்ண கண்ணனே உனது எண்ணம் - மல்லிகா
5. அழைக்காதே - மணாளனே மங்கையின் பாக்கியம்
6. உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே - உத்தமபுத்திரன்
7. சின்னஞசிறு கண்மலர் - பதிபக்தி
8. உன்னைக் கண்டு நானாட - கல்யாணப் பரிசு
9. தங்கத்திலே ஒரு குறை - பாகப்பிரிவினை
10. சொக்குதே மனம் சுத்துதே ஜகம் - பாக்தாத் திருடன்
11. கலையே என் வாழ்க்கையின் திசை - மீண்ட சொர்க்கம்
12. கண்கள் இரண்டும் என்றும் உன்னைக் கண்டு - மன்னாதி மன்னன்
13. மாலைப் பொழுதின் மயக்கத்திலே - பாக்கிய லஷ்மி
14. காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே - பாக்கிய லஷ்மி
15. காதல் எனும் வடிவம் கண்டேன் - பாக்கிய லஷ்மி
16. மலரே மலரே தெரியாதா - தேன் நிலவு
17. அத்தான் என்னத்தான் - பாவ மன்னிப்பு
18. மயங்குகிறாள் ஒரு மாது - பாசமலர்
19. ஆலய மணியின் ஓசையை - பாலும் பழமும்
20. காதல் சிறகை காற்றினில் - பாலும் பழமும்
21. பார்த்தால் பசி தீரும் - பார்த்தால் பசி தீரும்
22. சொன்னது நீதானா சொல் - நெஞ்சில் ஓர் ஆலயம்
23. முத்தான முத்தல்லவோ - நெஞ்சில் ஓர் ஆலயம்
24. அத்தை மகனே போய் வரவா - பாதகாணிக்கை
25. காவேரி ஓரம் - ஆடிப்பெருக்கு
26. நினைக்கத் தெரிந்த மனமே - ஆனந்த ஜோதி
27. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
28. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு - கற்பகம்
29. அத்தைமடி மெத்தையடி - கற்பகம்
30. கண்ணா கருமை நிற கண்ணா - நானும் ஒரு பெண்
31. கங்கை கறை தோட்டம் - வானம்பாடி
32. என்னை எடுத்து தன்னைக் கொடுத்து - படகோட்டி
33. அவள் மெல்ல சிரித்தாள் - பச்சை விளக்கு
34. கண்ணுக்கு குலமேது கர்ணா - கர்ணன்
35. என்னுயிர்த் தோழி - கர்ணன்
36. கண்கள் எங்கே - கர்ணன்
37. பார்த்த ஞாபகம் இல்லையோ - புதிய பறவை
38. உன்னை ஒன்று கேட்பேன் - புதிய பறவை
39. சிட்டுக்குருவி - புதிய பறவை
40. அழகே வா அருகே வா - ஆண்டவன் கட்டளை
41. உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன்
42. உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல - இதயக்கமலம்
43. மலர்கள் நனைந்தன பனியாலே - இதயக்கமலம்
44. என்னை மறந்ததேன் தென்றலே - கலங்கரை விளக்கம்
45. ஓஹோ ஹோ... ஓடும் எண்ணங்களே - நீலவானம்
46. தமிழுக்கும் அமுதென்று பேர் - பஞ்சவர்ணக்கிளி
47. கண்ணன் வருவான் - பஞ்சவர்ணக்கிளி
48. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - சாந்தி
49. உன்னைத்தான் நானறிவேன் - வாழ்க்கைப் படகு
50. கண்ணன் என்னும் மன்னன் பேரை - வெண்ணிறாடை


51.என்ன என்ன வார்த்தைகளோ - வெண்ணிறாடை
52.ஒரு நாள் யாரோ - மேஜர் சந்திரகாந்த்
53.கோமாதா எங்கள் குலமாதா - சரஸ்வதி சபதம்
54.தேடினேன் வந்தது - ஊட்டி வரை உறவு
55.மன்னவன் வந்தானடி தோழி - திருவருட்செல்வர்
56.ராமன் எத்தனை ராமனடி - லஷ்மி கல்யாணம்
57.நலந்தானா நலம்தானா - தில்லானா மோகனாம்பாள்
58.மறைந்திருந்து பார்க்கும் - தில்லானா மோகனாம்பாள்
59.நாளை இந்த வேளை பார்த்து - உயர்ந்த மனிதன்
60.இறைவன் வருவான் - சாந்தி நிலையம்
61.கடவுள் ஒரு நாள் உலகைக்காண - சாந்தி நிலையம்
62.சொல்லவோ சுகமான கதை - சிவந்த மண்
63.வசந்தத்தில் ஓர் நாள் - மூன்று தெய்வங்கள்
64.சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - சவாலே சமாளி
65.ஒரு ஆலயம் ஆகும் மங்கை மனது - சுமதி என் சுந்தரி
66.கலைமகள் கைப் பொருளே - வசந்த மாளிகை
67.சுகமோ ஆயிரம் - துணையிருப்பாள் மீனாட்சி
68.டார்லிங் டார்லிங் டார்லிங் - ப்ரியா
69.ராஜா சின்ன ராஜா - பூந்தளிர்
70.ஏ.. தென்றலே - நெஞ்சத்தை கிள்ளாதே
71.மானே ஒரு மங்கல சிப்பி - கடல் மீன்கள்
72.ராகவனே ரமணா ரகுநாதா - இளமைக் காலங்கள்
73.ராசாவே உன்னை காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள்
74.காலைத் தென்றல் பாடி வரும் - உயர்ந்த உள்ளம்
75.வரம் தந்த சாமிக்கு - சிப்பிக்குள் முத்து
76.ஆசையிலே பாத்தி கட்டி - எங்க ஊரு காவக்காரன்
77.ஆடம் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்
78.பூ பூக்கும் மாசம் - வருஷம் 16
79.கற்பூர பொம்மை ஒன்று - கேளடி கண்மணி
80.பூங்காவியம் பேசும் ஓவியம் - கற்பூர முல்லை
81.என் ராஜாவின் ரோஜா முகம் - சிவகாமியின் செல்வன்
82.பதினாறு வயதினிலே - அன்னமிட்ட கை
83.ஆடுமடி தொட்டில் இனி - அவள் ஒரு தொடர்கதை
84.இன்று வந்த இந்த மயக்கம் - காசேதான் கடவுளடா
85.மனமேடை மலர்களுடன் தீபம் - ஞான ஒளி
86.தாயின் முகம் இங்கு நிழலாடுது - தங்கைக்காக
87.நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் - நூற்றுக்கு நூறு
88.தை மாத மேகம் அது தரையில் ஆடுது - குழந்தைக்காக
89.கையோடு கை சேர்க்கும் காலங்களே - காவியத் தலைவி
90.சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
91.எண்ணம் போல கண்ணன் வந்தான் - பூவும் பொட்டும்
92.மாறியது நெஞ்சம் - பணமா பாசமா
93.சொல்ல சொல்ல இனிக்குதடா - கந்தன் கருணை
94.வெள்ளி மணி ஓசையிலே - இரு மலர்கள்
95.எங்கே நீயோ நானும் அங்கே - நெஞ்சிருக்கும்வரை
96.பொன் மேனி தழுவாமல் - யார் நீ?
97.பச்சை மரம் ஒன்று - ராமு
98.அம்மம்மா காற்று வந்து - வெண்ணிறாடை
99.அழகன் முருகனிடம் - பஞ்சவர்ணக்கிளி
100.கண்ணுக்கு மை அழகு - புதிய முகம்


இளையராஜா இசையில் சுசிலா பாடிய சில முத்தான டூயட் பாடல்கள்

01. செவ்வந்தி பூ முடிச்ச சின்னத்தா - 16 வயதினிலே

02. கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி

03. ஒரு காதல் தேவதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடம்மா

04. என் கண்மணி உன் காதலி - சிட்டுக்குருவி

05. மேகமே தூதாகவா - கண்ணன் ஒரு கைகுழந்தை

06. நதியோரம் - அன்னை ஓர் ஆலயம்

07. சந்து நதிக்கதை ஓரம் - நல்லதொரு குடும்பம்

08. மஞ்சள் நிலாவுக்கு - முதலிரவு

09. காத்தோடு பூ உரச - அன்புக்கு நான் அடிமை

10. ஆப்பக்கட அன்னக்களி - பாயும் புலி

11. காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி

12. பாட வந்ததோ ஓர் கானம் - இளமைக்காலங்கள்

13. பொத்துக்கிட்ட ஊத்துதடி வானம் - பாயும் புலி

14. பேசக்கூடாது - அடுத்தவாரிசு

15. தெற்குத்தெரு மச்சானே - இங்கேயும் ஒரு கங்கை

16. பூவிலே மேடை நான் போடவா - பகல்நிலவு

17. தில் தில் தில் மனதில் - மெல்லத் திறந்தது கதவு

18. அந்தி மழை மேகம் - நாயகன்

19. ராசாத்தி மனசுல - ராசானே உன்னை நம்பி

20. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு - பூந்தோட்ட காவல்காரன்

21. முத்துமணி மாலை - சின்னக்கவுண்டர்

22. ஓ நெஞ்ச தொட்டு சொல்லு ஏ ராசா - ராஜாதி ராஜா

23. தென்மதுரை வைகை நதி - தர்மத்தின் தலைவன்

24. அரும்பாகி மொட்டாகி பூவாகி - எங்க ஊரு காவல்காரன்

25. கண்ணுக்குள்ளே யாரோ - கை கொடுக்கும் கை

26. தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் - முடிவல்ல ஆரம்பம்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in