ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாக உள்ள தற்காலிகத் தலைப்பு கொண்ட 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கில் எடுக்கப்படுவதோடு தமிழிலும் தயாராகும் எனத் தெரிகிறது. தமிழ்ப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இதற்கு முன் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மதன் கார்க்கிதான் வசனம் எழுதியிருந்தார்.
இப்படத்தின் துவக்க விழாவில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்களை வெளியிட்டார்கள். அதில் கார்க்கி வசனம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.