'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக சர்கார் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் தணிக்கை உதவியோடு நீக்கப்பட்டன. மறுதணிக்கை செய்யப்பட்ட படம் மதியம் முதல் அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகிறது.
விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளிக்கு வெளிவந்த படம் சர்கார். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
திடீர் எதிர்ப்பு
பணிந்த சர்கார்
சர்ச்சை காட்சிகள் நீக்கம்
பிரச்னை தீர்ந்தது
முன்னதாக இந்தக்காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்ட படக்குழுவிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார். சர்கார் சர்ச்சை காட்சிகள் நீக்கியதால் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் இனி இந்தப்படத்திற்கு எந்த பிரச்னைகளும் எழாது என தெரிகிறது.
சர்கார் சர்ச்சைகள் நீக்கம் என்னென்ன.?
01. சர்கார் படத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் போட்டு கொளுத்தும் காட்சி (ரீல் எண் 7) நீக்கப்பட்டுள்ளது.
02. வரலட்சுமியின் கேரக்டர் பெயரான கோமளவல்லி என்கிற வார்த்தை எங்கெல்லாம் வருகிறதோ, அந்தக்காட்சிகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. (ரீல் எண் 7 மற்றும் 8)
03. "பொதுப்பணித்துறை" (ரீல் எண் 4) என்ற வார்த்தையும், "56 வருஷம்" (ரீல் எண் 7) என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளன.