ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த 13 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் தமன்னா. அவருக்கான படவாய்ப்புகள் குறைந்தது போன்ற நிலை உருவானபோதும் தற்போது மீண்டும் விட்ட இடத்தை பிடித்துள்ளார் தமன்னா.
அதாவது, தமிழில் சீனுராமசாமியின் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருப்பவர், பிரபுதேவாவுடன் தேவி-2, விஷாலுடன் ஒரு படம் என மூன்று படங்களில் நடிக்கிறார். அதேப்போல், தெலுங்கில் குயின் ரீமேக்கில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக சிரஞ்சீவியின் சைரா, எப்-2, ஜூனியர் என்டிஆருடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
ஆக, கடந்த ஒரு வருடமாக தமன்னாவின் மார்க்கெட் சரிந்தது போன்ற நிலை இருந்தபோதும், தற்போது சில புதிய படங்களை கைப்பற்றி மீண்டும் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். அந்த வகையில் அடுத்த ஆண்டு தமன்னா நடித்து 8 படங்கள் வரை திரைக்கு வர உள்ளன.