தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து ஹிட்டடித்த படம் அர்ஜூன் ரெட்டி. அந்த படத்தை தற்போது பாலா தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் சுகுமார் விடுத்துள்ள ஒரு செய்தியில், வர்மா படத்தில் அறிமுகமாகியுள்ள துருவ் விக்ரம் ஒரு டேக் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறார். நல்ல திறமையுள்ள அவர், காட்சிகளில் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துகிறார். அவரது தந்தை சிறந்த நடிகர் என்பதினால்தானோ என்னவோ, இயற்கையாகவே துருவ் விக்ரமிடம் நடிப்பாற்றல் அதிகமாக உள்ளது. பல காட்சிகளில் வியக் கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.