வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த '96' படம் அக்டோபர் 4ம் தேதி வெளியானது. ஒரு இயல்பான, கண்ணியமான காதல் கதையாக வெளிவந்த இந்தப் படம், ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய வெற்றியைப் பெற்று இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 25 நாளைக் கடந்த இந்தப் படம், 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கேரளாவில் இந்தப்படம் சுமார் 7 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. ரஜினிகாந்தின் 'காலா', சூர்யாவின் 'தானா சேர்நத் கூட்டம்' ஆகிய படங்களை விட இந்தப் படத்தின் வசூல் அதிகம் என்கிறார்கள். இப்படத்தின் கேரள உரிமை சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது.
படம் வெற்றி பெற்றாலும் சமீபத்திய கதை சர்ச்சையில் இந்தப் படமும் சிக்கியது. 'பிபோர் சன்ரைஸ்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்றும், பாரதிராஜாவின் உதவி இயக்குனர் சுரேஷ் சத்ரியன் அவர் எழுதிய '92' என்ற கதையின் காப்பிதான் '96' படம் என்றும் செய்திகள் வெளியானது.
'96' படத்தின் வெற்றி விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை இன்னும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.