Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் போராட்டத்துக்கு காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர் தான்: வருண் ராஜேந்திரன்

31 அக், 2018 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Director-SA-Chandrasekar-is-my-inspiration-to-protest-says-Varun-Rajendran

விஜய், கீர்த்தி சுரேஷ் நடத்த சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்ற துணை இயக்குனர் வழக்கு தொடர்ந்தார். ஏ.ஆர்.முருகதாசும் இது என்னுடைய கதை தான் வழக்கை சந்திக்க தயார் என்றார்.

இந்த நிலையில் இருதரப்பும் சமாதானம் ஆயினர். வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது உரிமைக்காக தீவிரமாக போராடிய வருண் ராஜேந்திரனுக்கும், அவருக்கு துணையாக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் "நான் என் உரிமைக்காக போராட காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர்தான்" என்று வருண் ராஜேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:


வழக்கு போட்டு சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. என் கதைக்கு அங்கீகாரம் கேட்டுதான் போராடினேன். 2004ம் ஆண்டு விஜய்க்காக எழுதிய கதை தான் இது. அவரது தந்தையும் எனது குருவுமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சொல்லி படமாக எடுக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை.


ஆனால் எனது இந்தப் போராட்டதுக்கு காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அவர் தான் எனக்கு தூண்டுதல். எனக்குள் போராட்ட குணத்தை விதைத்தவரும் அவர் தான். இப்போது என் கதைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகரை சந்திக்க இருக்கிறேன். விஜய் சர்கார் அமைப்பதற்காக எனது செங்கோலை விஜய் ரசிகர்களுக்கும், எஸ்.சி.சந்திரசேகர் சார் குடும்பத்திற்கும் தீபாவளி பரிசாக அளிக்கிறேன்.


இவ்வாறு வருண் கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in