தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'மைனா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் அமலா பால். அதன்பின் 'தெய்வத் திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப் பயலே, ராட்சசன்' என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 'ஆடை, அதோ அந்த பறவை போல' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்று அமலாபாலின் பிறந்த நாள். அதனால், ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த அமலா பால் தான் இன்று 27வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன் என்ற தகவலைக் கூறியிருக்கிறார்.
“காலையில் 5 மணிக்கு எழுந்து சைக்கிளிங் செய்து என்னுடைய யோகாசாலைக்கு செல்கிறேன். மகிழ்ச்சியுடன் சுவாசிக்கிறேன். என்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்துள்ளேன். உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார் அமலா பால்.