‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் வசூலில் முதலிடம் பிடிப்பது, விமர்சனத்தில் அதிக ஸ்டார் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும், அந்தப் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது எவ்வளவு ரேட்டிங் பெறுகிறது என்பதும் ஒரு சாதனைதான். வசூலில் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள் கூட டிவியில் ஒளிபரப்பாகும் போது அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கிடையாது. தியேட்டர்களில் பெரிதாக ஓடாத படங்கள் கூட டிவியில் ஒளிபரப்பாகும் போது பலரால் பார்க்கப்படும். இந்தப் படம் போய் ஓடவில்லையே என்ற வருத்தத்தை நேயர்களிடம் ஏற்படுத்தும்.
கடந்த ஆறு மாதங்களில் டிவிக்களில் ஒளிபரப்பான படங்களில் 'கடைக்குட்டி சிங்கம்' படம் 11.9 டிவிஆர் பெற்று அதிக ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்தப் படத்திற்கடுத்து 'ஸ்கெட்ச்' படம் 10.4, குலேபகாவலி 10.1, விவேகம் 8.9, அண்ணாதுரை 6.8 டிவிஆர்களைப் பெற்றுள்ளது.
'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளிவந்த போது அந்தப் படம் டிவி தொடர் போல இருப்பதாக பலரும் விமர்சித்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் மீறி அந்தப் படம் பெரிய லாபத்தைக் கொடுத்தது. தற்போது டிவியிலும் ஒளிபரப்பாகி அதிலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. மக்கள் நல்ல படங்களைக் கொடுத்தால் தியேட்டரிலும் சரி, டிவியிலும் சரி ரசிப்பார்கள் என்பதை 'கடைக்குட்டி சிங்கம்' புரிய வைத்துள்ளது.