தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடைக்குட்டி சிங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் தேவ். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமணன் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
அதிரடி ஆக்சன் நிறைந்த திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கார்த்தி கோபமாக பைக் அருகே நின்றபடி போஸ் கொடுக்கிறார்.
தேவ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா, டுவிட்டரில் வெளியிட்டார். விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது.