ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் சந்திரமெளலி படத்தில் முதன்முறையாக பிகினி உடையில் நடித்திருந்தார் ரெஜினா. ஆனபோதும் அவருக்கு அதையடுத்து பெரிய அளவிலான படங்கள் இல்லை. தற்போது அரவிந்த்சாமி நடித்து வரும் கள்ளபார்ட் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியில்லாத ஒரு வேடத்தில் டான்சராக நடிக்கும் ரெஜினா, கவர்ச்சியாகவும் ஒரு பாடலில் ஆடியிருக்கிறார்.
இந்த வேடத்தில் நடிக்க முதலில் அஞ்சலி, ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகளிடம் தான் பேசினார்கள். ஆனால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் அவர்கள் மறுத்து விட்டார்கள். அதன் காரணமாகவே அந்த வேடத்திற்கு ரெஜினாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.