மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 27ம் தேதி துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது.
'எந்திர லோகத்து சுந்தரியே..., ராஜாளி...' என்ற அந்த இரண்டு பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ யு-டியூப்பில் காலை 11 மணிக்கு வெளியிட்டனர்.
வெளியான 9 மணிநேரத்தில், எந்திர லோகத்து சுந்தரியே... பாடலுக்கு 4.32 லட்சம் பார்வைகளும், 28 ஆயிரம் லைக்குகளும், ராஜாளி... பாடலுக்கு 5.91 லட்சம் பார்வைகளும், 39 ஆயிரம் லைக்குகள் மட்டுமே கிடைத்தன.
இப்படத்தில் உள்ள மூன்றாவது பாடலை இன்னும் வெளியிடவில்லை. நா.முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...'பாடலை எப்போது வெளியிடுவார்கள் என்று தெரியவில்லை.