மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பிரேம்குமார் இயக்க விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் '96'. இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று நல்ல வசூலையும் கொடுத்து மாபெரும் வெற்றிப்படமாகிவிட்டது.
இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு நல்ல விலை கொடுத்து வாங்கியிருந்தார். தெலுங்கில் 'நான் ஈ' படத்தின் யதார்த்தமான காதல் ஜோடியான நானி, சமந்தா ஆகியோரை வைத்து அவர் படத்தை ரீமேக் செய்யலாம் என நினைத்திருந்தார்.
நேற்று டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ,“த்ரிஷா கதாபாத்திரத்தை நீங்கள் தெலுங்கில் ஏற்று நடிக்கப் போகிறீர்கள் எனக் கேள்விப்பட்டோம், இது உண்மையா ?' என சமந்தாவிடம் கேட்டிருந்தார். அதற்கு சமந்தா இந்தப் படத்தை ரீமேக் செய்யக்கூடாது என சமந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால், '96' தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.