'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. 96 படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் வெளியாக உள்ள படம் சீதக்காதி. பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள இப்படத்தில், நாடக கலைஞராக வயதான முதியவராக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
ஏற்கனவே இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அய்யா என்கிற பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி, நாடக கலைஞராக, இளமையான தோற்றத்தில் வேடன் வேடத்தில் உள்ளார். இதையும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சீதக்காதி படத்திற்கு யு சான்று கிடைத்திருக்கிறது. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.