மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் '96'. உணர்வுபூர்வமான காதல் கதையாக இருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
'96'ம் வருடத்தை மையமாக வைத்தும், பள்ளிக் காலத்தை மையமாக வைத்தும் பலரும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அது சம்பந்தமான பல மீம்ஸ்களும் வந்தது படத்திற்கு இலவச விளம்பரமாகவும் அமைந்தது. தற்போது தீபாவளி கலெக்ஷனில் த்ரிஷா படத்தில் அணிந்திருந்து மஞ்சள் நிற சுடிதாரும் கடைகளுக்கு வந்துவிட்டது.
இப்படி பலரின் மனதை கொள்ளை கொண்ட '96' படம், இந்த இரண்டு வாரங்களில் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாயை இப்படம் வசூலித்திருக்கிறதாம். படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்துவிட்டது.