ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சி.வி.குமார் தயாரித்த முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம்குமார் இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளியான படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலாபால், ராமதாஸ் முதலானோர் நடித்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவ்வான டாக் இருந்தது.
அதனால் ராட்சசன் படம் வணிகரீதியில் வெற்றிப்படமாக அமைந்தது. தனது முதல் படமான 'முண்டாசுப்பட்டி' படத்தின் இரண்டாம் பகத்தை விரைவில் இயக்க இருக்கிறார் இயக்குனர் ராம்குமார். அதற்கான கதையையும் ரெடி பண்ணிவிட்டார்.
'ராட்சசன்' பட வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், ராம்குமார் கூட்டணி 3-வது முறையாக 'முண்டாசுப்பட்டி' -2 படத்தில் இணைகிறது. 'முண்டாசுப்பட்டி' 2 படத்தை சி.வி.குமார் தயாரிக்க திட்டமிட்டிருந்நிலையில், தற்போது விஷ்ணு விஷாலே அந்தப்படத்தை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.
சி.வி.குமார் 'முண்டாசுப்பட்டி' 2 டைட்டிலை விஷ்ணு விஷாலுக்கு விட்டுக் கொடுப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை சி.வி.குமார் அந்தப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று முரண்டு பிடித்தால் அதில் விஷ்ணு விஷால் நடிப்பாரா?
பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையில், கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் ராம்குமார்.