தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்குத் திரையுலகத்தில் இப்படி ஒரு வசூல் மூன்றே நாட்களில் நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வௌவிந்த 'அரவிந்த சமேதா' படம் மூன்றே நாட்களில் 100 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
படம் வெளியான அக்டோபர் 11ம் தேதி மட்டுமே உலகம் முழுவதும் 60 கோடி ரூபாயை வசூலித்ததாம். 'பாகுபலி' அல்லாத ஒரு தெலுங்குப் படத்தின் அதிகபட்ச வசூல் இது என்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்களிலும் இந்தப் படம் 40 கோடி வசூல் செய்து 100 கோடியைத் தாண்டிவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் இந்தப் படம் வசூலைக் குவித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மூன்றே நாட்களில் 12 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்துள்ளது. 130 கோடி வசூலைத் தாண்டினால் இந்தப் படம் அனைவருக்கும் லாபத்தைக் கொடுக்கும். அது இன்னும் சில நாட்களில் நடந்து விடும்.