‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
2016ம் ஆண்டில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ரெமோ. இந்த படத்தில் ரெஜினா மோத்வானி என்றொரு நர்ஸ் வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்தார். அனிருத் இசையமைத்தார்.
இந்த படம் வெளியாகி நேற்றோடு 2 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனை கொண்டாடும் வகையில், தனது மகள் ஆராதனாவுடன் தானும் ரெமோ நர்ஸ் கெட்டப்பில் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோவை சிவகார்த்திகேயனின ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
முதன்முதலாக தான் தயாரித்துள்ள கனா படத்தில் மகள் ஆராதனாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பாடியுள்ள வாயாடி பெத்த புள்ள... பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.