பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'நியூ வேர்ல்டு' என்ற 2013ம் ஆண்டு கொரியன் பட டிரைலருக்கு யு டியுபில், இப்போது திடீரென புதிதாகப் பார்வைகள் கிடைக்கும் என அவர்களே நம்பியிருக்க மாட்டார்கள். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' படம், 2013ம் ஆண்டில் வெளிவந்த 'நியூ வேர்ல்டு' என்ற படத்தின் தழுவல் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது.
பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட சிறப்பு பெற்ற அந்தப் படம் கொரியன் மொழியில் வெளிவந்த சிறந்த 'கேங்ஸ்டர்' படம் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு குற்றங்களைச் செய்யும் கோல்டுமூன் என்ற கிரைம் நிறுவனத்தின் தலைவர் கொல்லப்பட அவருடைய இடத்தைப் பிடிக்க அந்த நிறுவனத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பவருக்கும், வேறு இருவரும் அந்த நிறுவனத்தின் தலைமைப் பதவியைப் பிடிக்க போட்டி போடுகிறார்கள். அதே சமயம் அந்த நிறுவனத்தை அழிப்பதற்காக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, அந்த நிறுவனத்தின் இரண்டாவது இடத்தில் இருப்பவருக்கு வலது கையாக இருக்கிறார். போலீஸ் திட்டத்தின்படி அந்த நிறுவனம் அழிக்கப்பட்டதா, அதன் தலைமைப் பதவியைப் பிடிப்பவர்களுக்கு இடையேயான போட்டி என்ன ஆனது என்பது தான் 'நியூ வேர்ல்டு' படத்தின் கதை. இந்தக் கதையை அப்படியே தமிழுக்கு ஏற்றபடி மாற்றி மணிரத்னம் கொடுத்துவிட்டதாக பலரும் தற்போது விமர்சித்து வருகிறார்கள்.
அதேசமயம் விஜய் நடித்த 'போக்கிரி' படத்தின் விஜய் கதாபாத்திரம் தான் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் என்றும், மணிரத்னம் புதிதாக கதாபாத்திர வடிவமைப்பைச் செய்யவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் இப்படிப்பட்ட சர்ச்சைகள் வருவது வழக்கமான ஒன்று தான். இந்த முறை 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் இந்த கொரியன் காப்பி சர்ச்சை கொஞ்சம் அதிகமாகவே ஒலிக்கிறது.