பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 2016ல் மலையாளத்தில் பிஜூமேனன்-ஆசிப் அலி இணைந்து நடித்த 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என்கிற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய காலித் ரஹ்மான் அடுத்ததாக மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது படத்திற்கு உண்ட என டைட்டில் வைத்துள்ளனர். இந்தப்படத்தில் மம்முட்டி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஜிகர்தண்டா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கேவ்மிக் யு ஆரி தான் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அது மட்டுமல்ல க்ரிஷ் 3 மற்றும் தங்கல் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களின் சண்டை காட்சிகளை வடிவமைத்த சாம் கவுசல் இந்தப் படத்தின் சண்டை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.