'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
அட்டகத்தி நந்திதா ஸ்வேதாவும், வைபவும் இணைந்து டாணா என்ற பேய் படத்தில் நடிக்கிறார்கள். யோகிபாபு, பாண்டியராஜன் காமினேஷனில் காமெடி காட்சிகள் இடம்பெறுகிறது. இதனை யுவராஜ் சுப்பிரமணி என்ற புதுமுகம் இயக்குகிறார். நோபல் மூவீஸ் சார்பில் கலைமாமணி தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். ஜி.ஆர்.என்.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி தயாரிப்பாளர் கலைமாமணி கூறியதாவது:
என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறோம்.
சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன். இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது என்றார்