பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தும்ஹாரி சுலு படம், தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீ-மேக்காகி உள்ளது. ஜோதிகா, வித்யாபாலன் வேடத்தில், ரேடியோ ஜாக்கியாகவும், அவரது கணவராக விதார்த்தும், இன்னொரு முக்கிய ரோலில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவும் நடித்துள்ளனர். ராதா மோகன் இயக்கி உள்ளார்.
இப்படம், அக்., 18-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டீசரை வெளியிட்டுள்ளனர். ஹலோ எப்.எம்.-ல் வேலை பார்க்கும் ஆர்.ஜே., விஜயலட்சுமியாக ஜோதிகா வருகிறார். குடும்ப பெண்ணாகவும், அதேசமயம் குறும்புத்தனமான பெண்ணாகவும் டீசரில் ஜோதிகா அசத்தி இருக்கிறார்.